வேர்களும் கிளைகளும்: கனடாத் தமிழ் ஈழச் சங்கம்

[Roots and Branches: The Tamil Eelam Society of Toronto]
எழுதியவர் : சிவா விஜேந்திரா

நாகரட்ணம் சிவலிங்கம் 1966ல் ஸ்ரீலங்காவிலிருந்து இங்கிலாந்து வழியாக ரொறன்ரோவுக்கு வந்துசேர்ந்தார். முன்பு, ஏனைய தமிழ்க் குடிவரவாளர்கள் ஒரு சிறிய அளவில் மட்டும் இருந்த இந்த நகரத்துக்கு கனடாவிலுள்ள திறமையான தொழிலாளர் சக்தியை அதிகரிப்பதற்காக கனடா அரசாங்கத்தினால் வரவேற்கப்பட்டவர்களில் ஒருவராக திரு. சிவலிங்கம் இருந்தார். பன்னிரண்டு வருடங்களின் பின்னர், இன்று கனடாத் தமிழ் ஈழச் சங்கம் (TESOC) என அழைக்கப்படும் சமூக அமைப்பை, சொலமன் இராஜநாயகத்துடன் மற்றும் சிலருடனும் சேர்ந்து இவர் நிறுவினார். இந்த அமைப்பினதும் இதன் கூட்டு நிறுவனர்களில் இருவரான திரு. சிவலிங்கம் மற்றும் சொலமன் இராஜநாயகத்தினதும் கதை, ரொறன்ரோவில் தமிழ் சமூகத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு பற்றியும், தாங்கள் தத்தெடுத்த வீட்டை தமிழர்கள், எவ்வழிகளில் செழுமையாக்கியுள்ளார்கள் என்பது பற்றியுமான புரிதல்களை வழங்குகின்றது.

1979 ல் ஒன்ராறியோவின் பல் கலாச்சார வரலாற்றுச் சங்கத்துடன் (Multicultural History Society of Ontario) திரு. சிவலிங்கம் பேசும் போது, இரண்டாம் உலக மகாயுத்தத்தைத் தொடர்ந்து வந்த தசாப்தங்களில் திறன்களுள்ள குடிவரவாளர்கள் பற்றிய கனடாவின் ஆர்வம், ஆதரவு மற்றும் தேவையை நினைவுகூர்ந்தார். வேலைவாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும் என்ற உண்மையைத் தவிர இந்த நாட்டைப் பற்றி அவருக்கு மிகவும் சிறிதளவே தெரிந்திருந்தது. சில நிச்சயமின்மைகளுடன் கனடாவுக்குக் குடிபெயர அவர் விண்ணப்பித்த போதும், கனடாத் தூதரகத்தால் அவர் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், அவரது ரொறன்ரோவுக்கான பயணத்துக்கு தேவையான நிதி கடனாகவும் கிடைத்தது. தொலைபேசிப் புத்தகத்தின் ஊடாகச் செய்த ஒரு விரைவான தேடல், சிங்களவர், யப்பானியர், சீனர், மற்றும் ஒல்லாந்தருடன் கூட வேலை செய்யும் கட்டடக்கலை வரைவாளர்த் தொழில் ஒன்றை, ஒரு நிறுவனத்தில் பெற்றுக்கொடுத்தது. சிறிதுகாலம் திரு. சிவலிங்கம், சமூகங்களுக்குரிய, பல் கலாச்சார உணவுகளைச் சாப்பிடும் போது வாழ்க்கை பூராவும் தொடரும் சினேகிதங்களையும் வளர்த்தபடி, தன்னுடன் கூட வேலை செய்பவர்களுடன், வாடகை அறைகள் உள்ள ஒரு வீட்டில் வாழ்ந்தார். 1971 ல் ரொறன்ரோப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் பட்டத்தை நிறைவு செய்த பின்னர், அவர் திருமணம் செய்வதற்காக குறுகிய காலத்துக்கு ஸ்ரீலங்காவுக்குத் திரும்பிப் போனார். மூன்று மாதங்களின் பின்னர், அவரது புதிய மனைவி ஜனனி கனடாவில் அவருடன் இணைந்து கொண்டதுடன் தட்டெழுத்தாளர் வேலையையும் மாகாண அரசில் key punch operator வேலையையும் எடுத்துக் கொண்டார். அவர்களுக்கு பிள்ளைகள் பிறந்த போது தமிழ்க்-கனடியர்களின் புதிய சந்ததி தங்களுடைய தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்கு உதவிசெய்ய வேண்டிய தேவையை      அவர்கள் சீக்கிரம் உணர்ந்தனர்.

ரொறன்ரோவுக்கு 1958 ல் வந்துசேர்ந்த சொலமன் வேலுப்பிள்ளை இராஜநாயகமும் MHSO க்குக் கொடுத்த பதிவு செய்யப்பட்ட பேட்டியில் இதே போன்ற ஒரு பயணம் பற்றித் தெரிவித்திருக்கின்றார். திரு. சிவலிங்கத்தைப் போல், இரண்டாம் நிலை கல்விக்கு பிந்திய கல்வியைப் பெறவும் முடிவில் குடிபெயரவும் என அவருடைய கிராமத்திலிருந்து முதலில் வந்தவர்களில் அவரும் ஒருவர். ஸ்ரீலங்காவிலிருந்த ஒரு கனடிய நிறுவனத்தில் நிலஅளவையாளராக வேலை செய்த அவர் நிருமாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த புதிய St. Lawrence Seaway ஐ அளவீடு செய்வதில் அவர்களுக்கு உதவுவதற்காக மொன்றியலுக்கு இடம்பெயர்ந்தார். திரு. இராஜநாயகத்துக்கு கனடா பற்றிய எந்த முன்னறிவும் இருக்கவில்லை, ஆனால் அவர் வந்துசேர்ந்த போது அவர் சந்தித்த குடிவரவு அதிகாரிகளாலும் மக்களாலும் வரவேற்கப்பட்டதாக அவர் உணர்ந்தார். அதிஷ்டம் குறைவாக இருந்த மற்றவர்களை அவருக்குத் தெரிந்திருந்த போதும், குடியிருப்பு தேடும் போது அவர் எந்த விதமான பாகுபாட்டுக்கும் உள்ளாகவில்லை. Seaway ஐ நிறைவான பின்னர் நகரத் திட்டமிடலாளராக வந்தவருடன், ஆசிரியராக வேலை எடுத்த, அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மணப்பெண், 1960 ல் இணைந்து கொண்டார். பிள்ளைகள் பிறந்த போது அவர்களுக்கு தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் கற்பிக்க வேண்டிய தேவையை இரு பெற்றோர்களும் உணர்ந்தனர்.

தங்களுடைய கனடாச் சூழலுடன் விரைவாக இணைந்து கொண்ட திரு. சிவலிங்கமும் திரு. இராஜநாயகமும் அரசாங்கத்தின் எல்லா மட்டங்களிலும் உள்ள உள்ளூர் அரசியல் வேட்பாளர்களுடன் தன்னார்வலர்களாக இருந்தார்கள். அதே நேரத்தில், மற்றவர்களுடன் ஒன்று சேர வசதியான தமிழ்க் கடைகள் அல்லது உணவகங்கள் குறைவாக இருப்பதையும் தமிழ் நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் கிட்ட இருக்காமல் வேலையிடத்துக்கு கிட்ட இருப்பதையும் அவர்கள் அவதானித்தார்கள். அவருடைய மகள்மார் ஸ்ரீலங்கா உணவுடன் கனடா உணவையும் சாப்பிடுவதிலும், அனைத்துப் பின்புலங்களிலும் நண்பர்கள் வைத்திருப்பதையும் மற்றும் ballet நடனத்துடன் பாரம்பரிய இந்திய நடனத்தைப் பயில்வதிலும் எவ்வாறு ஒன்றிணைந்து இருக்கிறார்கள் என்பதைத் தனது மெச்சுதலுடன் திரு. சிவலிங்கம் நினைவுபடுத்திப் பார்த்தார். இருந்தும் மொழிக்கு ஊடாக அவர்களுடைய கலாச்சார வேர்களுடன் அவர்கள் மேலும் தொடர்புபட்டிருப்பதையே அவர் விரும்புகின்றார். திரு. இராஜநாயகமும் அவருடைய மனைவியும் 1978 ல் இதே உணர்வை பிரதிபலித்தார்கள். “நமது கலாச்சாரத்துக்கு அந்நியராக [எங்களுடைய பிள்ளைகள்] வளர்வதை நாங்கள் விரும்பவில்லை,” என்றவர்கள் “இருந்தாலும் அவர்கள் நல்ல கனடியர்களாக இருப்பதையே நாம் நிச்சயமாக விரும்புகிறோம்.” என்றும் சொன்னார்கள்.

திரு. சிவலிங்கமும் திரு. இராஜநாயகமும் தங்களுடைய ஒன்றுசேர்க்கப்பட்ட சக்தியையும் அக்கறையையும், தமிழ் மொழியிலும் கலாச்சாரக் கல்வியிலும் கவனம் செலுத்தும் அமைப்பான கனடாத் தமிழ் ஈழச் சங்கத்தை, இணைந்து நிறுவுவதில் செலவழித்தார்கள். தலைவராக திரு. சிவலிங்கத்தையும், எட்டு குழு அங்கத்தவர்களுடன் 70 அங்கத்தவர்களைக் கொண்ட TESOC நிதிக்காக எதிலும் தங்கியிருக்கவில்லை. பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு தனிப்பயிற்சி கொடுக்கக் கூடியதாக, உள்ளிட்ட வழிகாட்டுதல்களுடன் மொழிப் பயிற்சித் தொகுப்புகளை வெளியே அனுப்பும் பணியை முதலில் இது செய்தது. இரண்டு வருடங்களின் பின்னர், இது சட்டரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டதுடன் Lansdowne Avenue மற்றும் Bloor வீதிச் சந்திப்பில் உள்ள கடைத்தொகுதியின் அடித்தளம் ஒன்றில் தனக்கான ஒரு இடத்தையும் எடுத்தது. இந்தப் புதிய இடத்தில் பாரம்பரியமான தமிழ் நடனம், இசை, மற்றும் மரபுகளைக் கற்பிக்கும் வகுப்புக்கள் நடாத்தப்பட்டன. இந்த TESOC அங்கத்துவம் மத எல்லைகளைக் கடந்தது. அத்துடன் திரு. சிவலிங்கத்தின் கூற்றுப்படி எவருமே சாதி பற்றி அதிகம் அக்கறை எடுக்கவில்லை.

சிவா சேகரனும் (இடது) S. இராஜரட்ணமும் கனடாத் தமிழ் ஈழச் சங்கத்தில், ரொறன்ரோ, 1993.  MHSO Collection

1981 ம் ஆண்டளவில், கிட்டத்தட்ட 5,000 தமிழர்கள் கனடாவில் இருந்தனர், அவர்களில் அனேகமானோர் ரொறன்ரோவில் வாழ்ந்தனர்.  அது மிகவும் சிறிய மற்றும் குடியேறிய சமூகமாக இருந்தது. அப்போது, இரண்டு தமிழ் வெளியீடுகள் (செந்தாமரை, ஒரு சஞ்சிகை மற்றது தமிழர், ஒரு புதினப்பத்திரிகை), Asia Television Network ல் எப்பொழுதாவது நடைபெறுகின்ற தமிழ் நிகழ்ச்சிகள் மற்றும் ஒன்று அல்லது இரண்டு வழக்கமான ரேடியோ ஒலிபரப்புக்கள் இருந்தன. திரு. சிவலிங்கம் குடும்பம் போன்ற இந்துக் குடும்பங்கள் சிலவேளைகளில் சிறிய குடும்பக் குழுக்களாக வெள்ளிக்கிழமை பூசைகளுக்கு கூடியதுடன், மதச்சார்பற்ற விடுமுறையாக நத்தாரைக் கொண்டாடினார்கள். 1984 ல், இந்தப் பகுதியின், முதலாவது இந்துக் கோவிலான ஸ்ரீ கணேசா கோவில், Richmond Hill ல் பூர்த்தியாகும் வரைக்கும் அவர்கள் வெவ்வேறு அங்கத்தவர்களுடைய வீடுகளில் சடங்குகளைச் செய்தார்கள். திரு. இராஜநாயகம் போன்ற தமிழ்க் கிறிஸ்தவர்கள் ஏற்கனவே உள்ள தேவாலயங்களில் உள்ள ஆங்கில மொழியிலான பூசைகளில் கலந்து கொண்டதுடன் தங்களுடைய பூசைகளை நடத்துவதற்கு எப்பொழுதாவது அந்தத் தேவாலயங்களைப் பயன்படுத்தினார்கள்.

ஸ்ரீலங்காவில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்ததாலும், ரொறன்ரோவை நோக்கிப் பெருமளவில் தமிழ் அகதிகள் கனடாவுக்கு வந்து சேர்ந்ததாலும்,  சமூகத்தின் தன்மை 1980 களுக்கு ஊடாக பெருமளவில் மாறியது. தமிழ்ச் சமூகம் மிகவும் புலப்படத் தொடங்கியதும், 1970 களில் அவர்கள் அனுபவித்ததை விட அதிகமான இனவாதச் சம்பவங்களுக்கு அவர்கள் முகம் கொடுத்தனர். அதே வேளையில், TESOC ஒரு கலாச்சார அமைப்பிலிருந்து, ஒரு சட்டம் சார்ந்த மற்றும் சமூக சேவை அமைப்பாக விரைவில் வளர்ந்தது. அனைத்துத் தேசிய விண்ணப்பதாரிகளினதும் குடும்பப் பொறுப்பேற்றலைத் துரிதப்படுத்துவதற்கான குடிவரவாளர்களின் உரிமைக்காக, 1983 ல் ஒரு விசேட திட்டத்தை எட்டுவதற்கு அரசாங்கத்தின் அனைத்து மட்டத்திலும் அரசியல் அணைவை இப்போது நாடியுள்ளது. அதேயளவு முக்கியத்துவத்துடன் புதிய நகரத்தில் உள்ள தமிழ் அகதிகளின் அவசரத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் பணியாற்றியுள்ளது. 1950 களிலும் 1960 களிலும் வந்துசேர்ந்த நிபுணத்துவமானவர்களைப் போலன்றி, இந்தத் தமிழர்கள் மேற்குலக வாழ்க்கைக்கு பெரும்பாலும் ஆயத்தம் இல்லாதவர்களாக இருந்தார்கள். அத்துடன் சிலவேளைகளில் ஆங்கில மொழித்திறனும் போதாதவர்களாக இருந்தார்கள். வந்துசேர்ந்தவுடன் அவர்கள் வேலை செய்வதை புதிய அகதி நிர்ணய அமைப்பும் தடைசெய்தது, அது நிதிக்காக, அவர்களைச் சமூக சேவைகளில் சார்ந்திருக்கச் செய்தது. TESOC ன் Lansdowne மற்றும் Bloor ல் ரொறன்ரோ தமிழ்ச் சமூகத்தின் அடிப்படைத் தளமாக இருந்த இடம், புதிய தமிழ்க் கூட்டுறவு வீடமைப்பு முயற்சித் தளமானது. 1983 ல், அமைக்கப்பட்ட ஸ்ரீலங்காவின் சிறுபான்மையருக்கு உதவும் சமூகம் (SACEM), வருகின்ற தமிழ் அகதிகளுக்கு ஒரு தற்காலிகக் காப்பகத்தைக் கொடுக்கும் நோக்கத்துடன் 1988 ல்  Co-op ல் ஒரு நான்கு அறைகள் கொண்ட குடியிருப்பை குத்தகைக்கு எடுத்தது. ஒவ்வொரு படுக்கை அறையும், அவர்கள் ஒரு நீண்டகால வசிப்பிடத்தைத் தேடவும் வேலைவாய்பைப் பெறவும் நேரம் வழங்கக் கூடியதாக, வெவ்வேறு குடும்பங்களுக்கு அல்லது தனியாட்களுக்கு மூன்று மாதங்களுக்கு இடம் கொடுத்தது. TESOC மற்றும் SACEM போன்ற சமூக அமைப்புக்கள் அவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் குடியேற்றத்துக்கு உதவி செய்யக் காரணமாக இருந்தன.

TESOC நிறுவப்பட்ட நேரம் முதல் தசாப்தங்களாக தொடர்ந்து மாற்றமடைந்து, இப்போது ரொறன்ரோ கல்விச்சபையின் கீழ் கனடாவுக்கு புதிதாக வருவோருக்கு மொழி கற்பிக்கும் (LINC) திட்டத்துக்கான இடமாக உள்ளது. ஆங்கிலத்தைக் கற்கவும், கனடாச் சமுதாயம் மற்றும் கலாச்சாரம் பற்றி அறியவும் பல பின்புலங்களையும் கொண்ட வயதுவந்த மாணவர்கள் TESOC வில்,  வகுப்பில் ஒன்றாக இருக்கிறார்கள். பட்டறைகள் ஆரோக்கியம், பெற்றோரியம், வரவு செலவுத் திட்டமிடல் மற்றும் தொழில் தேர்ந்தெடுப்புகள் பற்றிக் கலந்துரையாடுகின்றன. அங்கேயே உள்ள தினப்பராமரிப்பில், அந்த மாணவர்களின் சிறிய பிள்ளைகள் ஒருவருடன் ஒருவர் விளையாடுவதுடன், குறுக்கு-கலாச்சார நட்புறவுள்ள அடுத்த தலைமுறையை உருவாக்குகிறார்கள்.

ரொறன்ரோவுக்கு புதிய வாழ்வை ஆரம்பிக்க 1950 களிலும் 1960 களிலும் வந்தவர்களின் பணிகளாலும் உறுதிப்பாட்டாலும் இவையாவும் ஆரம்பமாயின. தங்களுடைய பிள்ளைகளுக்கு ஒரு தமிழ்க் கலாச்சார நிலையத்தை வழங்கும் அவர்களுடைய பொதுவான இலட்சியம், வாழ்வின் அனைத்து துறைகளிலும் ரொறன்ரோவாசிகளுக்குச் சேவைசெய்யும் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளது. எங்களுடைய நகரத்தின் கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார வடிவமைப்புக்கு, இந்த நகரத்துக்கு வந்த புதியவர்கள் எவ்வாறான பங்களிப்பை அளித்தார்கள் என்பதற்கு கனடாத் தமிழ் ஈழச் சங்கம் போன்றவை ஒரு முக்கியமான உதாரணமாகும். அத்துடன் அவர்கள் அவ்வாறு செய்ததால் அதன் வளர்ச்சிக் கதையில் ஒரு இடத்தைத் தக்கவைத்துள்ளார்கள்.

ஆதாரங்கள்
Interviews with Nagaratnam Sivalingam and Solomon Velupillai Rajana

Heritage Toronto is pleased to acknowledge the support of the Government of Ontario, through the Ministry of Tourism and Culture, for this project.

This entry was posted in Heritage Diversity Stories. Bookmark the permalink.